Categories
சினிமா தமிழ் சினிமா

போராட்டத்தில் இறங்கிய சினிமா துணை நடிகர்கள்?…. எதற்காக தெரியுமா?… பரபரப்பு….!!!!

சினிமா படப் பிடிப்பில் கலந்துகொண்ட துணை நடிகர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகில் பள்ளத்தூர் பங்களாவில், நடிகர் அருள் நிதியின் “மூர்க்கன்” படத்தின் படப்பிடிப்பு சென்ற 2 தினங்களாக நடந்து வருகிறது. இவற்றில் நடிப்பதற்காக சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து துணை நடிகர்கள் அழைத்துவரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்ற 10 நாட்களுக்கு மேல் சினிமா படப் பிடிப்பு நடந்து வரும் சூழ்நிலையில், துணை நடிகர்களுக்கான ஊதியத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த 200-க்கும் அதிகமான துணை நடிகர்கள் அங்கு நின்ற பட குழுவினரின் வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து படக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து துணைநடிகர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின் அவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Categories

Tech |