தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சூரப்பட்டு சாலையில் பெயிண்ட் கம்பெனி ஒன்று அமைந்துள்ளது. இந்த கம்பெனியில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவலறிந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.