அமைச்சர் சேகர்பாபு, மத்திய மந்திரி தயாநிதிமாறன், அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் நேற்று புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரேஷன் கடை கட்டிடங்களை திறந்து வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, “தைப்பூசத்திற்கு கடந்த வருடம் வேலை எடுத்துக்கொண்டு சுத்தியவர்கள் இப்போது அதை பற்றி ஏதாவது கவலைப்பட்டார்களா ? வெற்றிவேல் வீரவேல் என்றார்கள்.
தற்போது தமிழ்நாட்டிலே அந்த வேல்கள் எங்காவது காட்சிக்கு வந்ததா ? அதோடு மட்டுமில்லாமல் போட்டோவை டுவிட்டரில் பரவவிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் திமுகவின் நிலைபாடு அது கிடையாது. எம்மதமும் சம்மதமே” என்று கூறினார். இந்த கருத்தானது பாஜக கடந்த 2020-ல் நடத்திய வேல் யாத்திரையை மறைமுகமாக விமர்சிப்பது போல் உள்ளது.