வலிமை படம் பொங்கலுக்கு வெளிவரும் என போனி கபூர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்து வினோத் இயக்கிய வலிமை திரைப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படுவதாக இருந்தது. இதனிடையே சில சிக்கல்கள் காரணமாக இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியிட படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வந்தது. ஏனெனில் தெலுங்கில் ராஜமவுலியால் தயாரிக்கப்பட்ட ஆர் ஆர் ஆர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது பின்பு அது ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்படும் என ரசிகர்கள் பயந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என உறுதியளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.