Categories
அரசியல் மாநில செய்திகள்

போன் போட்டு ஜெயக்குமார் மனைவிக்கு ஆறுதல்…? சசிகலாவின் மாஸ்டர் பிளான்…!!!

கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரின் மனைவிக்கு சசிகலா ஆறுதல் சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 30 சதவீத இடங்களில் கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகள் தங்கள் வசமாகும்  என தீர்மானித்திருந்தனர். ஆனால் மிகப்பெரிய வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வுக்கு இந்த பலத்த அடி காரணமாக சசிகலா கட்சிக்குள் நுழைவது  எளிதாக இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க தரப்பில் பேசியவர்களில் முக்கியமான ஒருவர் ஜெயக்குமார். இவர் அவரது கருத்துக்களை மட்டும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பையும் அதே ஊடகங்களில் கொட்டும்  ஒருவராக இருந்தார். ஜெயக்குமார் தற்போது தி.மு.க தொண்டரை  தாக்கிய விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தசூழலில்  சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் சசிகலாவே பலநேரங்களில் இருந்துள்ளார். தற்போது சசிகலா அமைதியான வழியிலேயே கட்சியை கைப்பற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதற்கு ஜெயக்குமாரின் கைதுக்கு அவரது மனைவிக்கு  ஆறுதல் தெரிவிப்பது சாதகமான பலன்களை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள். மதுசூதனன் உடல் நலிவடைந்து இருந்த போது மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார் சசிகலா. அதேபோல் ஓ.பி.எஸ் மனைவி இறந்தபோது அவருக்கும்  ஆறுதல் கூறினார். அந்த வகையில் ஜெயக்குமார் மனைவிக்கும் சசிகலா அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுவார்  என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |