Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போதை ஊசி விற்பனை”…. மேலும் ஒருவர் அதிரடி கைது….!!!!!

சின்மனூரில் போதை ஊசி விற்பனை செய்ததில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் சென்ற சில நாட்களாக போதை ஊசி விற்பனை செய்ததாக போலீசார் பலரை அதிரடியாக கைது செய்தார்கள்.

இந்நிலையில் போலீசார் கைது செய்யப்பட்ட ஜோனத்தன் மார்க்கிடம் விசாரணை மேற்கொண்டதில் சின்னூரில் இருக்கும் அய்யனார்புரத்தைச் சேர்ந்த நிஷாந்த் சுமார் 20க்கும் மேற்பட்ட போதை மருந்து பாட்டில்களை வாங்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் நிஷாந்தை இன்று கைது செய்தார்கள். மேலும் போதை மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |