தூத்துக்குடி மாவட்டத்தில் குட்டிப்பேட்டை பகுதியில் உமா மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கழுகுமலை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கனகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவில் மது அருந்திவிட்டு டாஸ்மார்க் கடைக்கு அருகில் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த சமயத்தில் கனகராஜின் கழுத்தில் உமாமகேஸ்வரன் கடித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் உமா மகேஸ்வரன் அங்கிருந்து செல்லாமல் டாஸ்மார்க் கடையின் அருகிலேயே நின்று கொண்டு கனகராஜ் மீண்டும் வந்ததும் விறகு கட்டையை எடுத்து உமா மகேஸ்வரனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த உமா மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிந்து கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.