மதுபோதையில் வந்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள காந்திவலி கிழக்கு பகுதியில் சுக்ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சுக்ராம் தினமும் மது குடித்துவிட்டு மனைவியை கொடுமைப் படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுக்ராமின் 2-வது மகன் தனது தந்தையை சுத்தியலால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுக்கிராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுக்கிரனின் மகன் காவல்நிலையத்தில் சென்று தந்தையை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்து சரணடைந்துள்ளார். அவருக்கு 18 வயது நிரம்பாததால் காவல்துறையினர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.