Categories
உலக செய்திகள்

போதையில் கார் ஒட்டிய டாக்டர்… “பரிதாபமாக பலியான உடன் சென்ற மாணவி”… கவலைப்படாமல் டாக்டர் சொன்ன பதில்… ஆத்திரமூட்டும் சம்பவம்..!!

விபத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் அதற்கு காரணமானவர் அவரது கைக்கடிகாரம் சேதமானது குறித்து கவலை தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான மருத்துவர் ஜோனாதன் நன்றாக மது அருந்திவிட்டு குடிபோதையில் 138 மைல் வேகத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அந்த விபத்தில் அவருடன் காரில் பயணித்த மருத்துவக் கல்லூரி மாணவி சமந்தா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த சமந்தாவின் மரணம் கொலையாக கருதப்பட்டு . ஜோனாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார் . அப்போது அவரை விசாரித்த அதிகாரிகள் தன்னால் மருத்துவ மாணவி சமந்தா உயிரிழந்ததை குறித்து கவலைப்படாமல் தான் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் சேதம் அடைந்து விட்டதாக வருத்தம் தெரிவித்தார் என நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

அதோடு அவர் தொலைபேசி மூலம் யாருக்கோ ஆம் கண்ணே உனக்கு அந்த கார் மிகவும் பிடித்தமான ஒன்று என்பதை நான் அறிவேன் என்றும் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. தான் செய்த செயலால் இளம் பெண்ணின் உயிர் பறிபோன நிலையில் அது குறித்து சிறிதும் கவலை இல்லாமல் தனது கார் சேதமடைந்தது குறித்தும் கைகடிகாரம் உடைந்தது குறித்தும்  ஜோனநாதன் கவலை தெரிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே  ஜோனநாதனின் செயலால் ஒரு மரணம் நிகழ்ந்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு இருக்கும் நிலையில் சமந்தாவின் தந்தை கூடுதலாக தனது மகள் மரணம் அடைய ஜோனாதன் தான் காரணம் என்றும் ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார்.

 

Categories

Tech |