Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போதையில் இருந்தார்களா…? மின்கம்பம் மீது பயங்கரமாக மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நண்பர்கள்….!!

மின்கம்பத்தின் மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள தபால் தந்தி நகரில் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான சுகன், அபு, ஷபான் அகமது ஆகியோருடன் காரில் வெளியே சென்றுள்ளார். இந்த காரை அகமது ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த நிழற்குடை, போக்குவரத்து சிக்னல், மின் கம்பம் போன்றவை மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

இதனையடுத்து கார் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடிபோதையில் காரை அதிவேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |