Categories
மாநில செய்திகள்

போதைப்பொருள் தடுக்க அதிரடி திட்டம்….. சட்டசபையில் முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

போதைப்பொருள் தடுப்பில் ஈடுபடும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார். இதில் “போதைப்பொருள் தடுப்பில் ஈடுபடும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படும். ஆளில்லா விமானப்அலகு காவல்படை பிரிவு ரூ.1.20 கோடி மதிப்பில் விரிவு செய்யப்படும்.

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போதைப்பொருள் நுண்ணறிவுடன் இணைத்து போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு என சீரமைக்கப்படும். சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவல் பயிற்சி கல்லூரி, வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சி வளாகத்திற்கு மாற்றப்படும்” என்ற பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார் .

Categories

Tech |