வட அமெரிக்காவில் மெக்சிகோ நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல்வேறு கடத்தல் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கும்பல்களுக்கு இடையே அவ்வபோது மோதல்களும் நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் மெக்சிகோவின் சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று இரு கடத்தல் கும்பலுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருபது பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்த இரு தரப்பும் சில்டட் ஜூவரிஸ் நகரின் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். பொதுமக்கள் உட்பட கண்ணில் பட்டவர்கள் அனைவரும் மீதும் இரு கும்பலும் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் இந்த மோதலில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மோதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறியனர்.