தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதில் 17 மாணவர்கள் உட்பட 19 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான வாகனங்கள் மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு கோ.மாவிடந்தல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய 2 வாகனங்களும் மோதியதில் ஒரு வாகனம் சாலையோரம் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் ஓட்டுநர், 8 மாணவிகள் உள்பட 17 மாணவர்கள், சாலையோரம் நடந்த சென்ற பெண் என 19 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.