மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வுகள் எழுதுவதற்கு டிப்ளமோ சிவில், ஐ.டி.ஐ. சர்வேயர், ஐ.டி.ஐ. வரைவாளர் படித்திருக்க வேண்டும்.
இந்நிலையில் இந்த தேர்வு வருகின்ற நவம்பர் மாதம் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக நமது மாவட்டத்தில் அமைந்துள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த வகுப்புகள் அனுபவிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுவதோடு, பாட குறிப்புகள் வழங்கப்படும் . மேலும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. எனவே இதில் சேர விரும்பும் நமது மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி ஆகியவற்றை 8110919990 எந்த வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்