கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலியா நாட்டில் கிஸ்மாயோ நகரத்தில் இருக்கும் மைதானத்தில் நடைபெறும் கிளப் போட்டியில் பங்கேற்பதற்காக கால்பந்து வீரர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து தீடிரென்று அந்த பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து சோமாலியா நாட்டில் வெகு நாட்களுக்கு பிறகு இக்கட்டான சூழ்நிலையில் தேர்தல் தொடங்கி ஜுபாலந்த் மாகாணத்தில் முதல் வாக்குப்பதிவானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தேர்தலின் போது நாங்கள் இடையூறு செய்வோம் என்று அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பு கொண்ட அல் சபாப் ஜிகாதிஸ் குழு மிரட்டல் ஓன்று விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.