தண்ணீரில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பம்மதுகுளம் பகுதியில் நேற்று எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வாலிபர்கள் சென்றுள்ளனர். இதில் கலந்து கொண்ட 5-க்கு மேற்பட்ட வாலிபர்கள் பம்மதுகுளம் அருகே இருக்கும் புழல் ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாம் மற்றும் விஜயராஜ் ஆகிய 2 பேரும் ஏரியில் மூழ்கிவிட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வாலிபர்களின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.