Categories
தேசிய செய்திகள்

போட்டித் திறனை அதிகரிக்கும்…. மொழியைக் காட்டி தடுக்க வேண்டாம்…. புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர்…!!

மும்மொழி கொள்கையை பற்றி தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கூறி இருக்கிறார்.

மத்திய அரசின் கொண்டு வந்திருக்கின்ற புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு உண்டாகியுள்ளது. தமிழகத்தில் அண்ணா காலத்திலிருந்தே இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தென்மொழி கல்விக் கொள்கையை திணிப்பது போன்று பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன. மும்மொழி மொழிக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இத்தகைய விவகாரத்தில் தமிழகத்தில் இருக்கின்ற முக்கிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக நிற்கின்றன. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், புதிய கல்விக் கொள்கை- ஆரம்ப பள்ளி முதல் உயர்கல்வி வரை உலகத் தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு வழங்க உள்ளது. தாய்மொழிக்கல்வி கட்டாயப்படுத்த பட்டுள்ளதை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமானதல்ல” என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாயம் என்பது எத்தகைய இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று விளக்கம் கூறினார். தமிழகத்தில் சிபிஎஸ்சி மாநில பாடத்திட்டத்திலான மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதனை கருதும்போது கூடுதலாக ஒரு மொழியை கற்கக்கூடிய வாய்ப்பினை அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் மட்டுமே இழக்கிறார்கள். இந்தியாவும் மற்றொரு இந்திய மொழியை கற்க விரும்புகின்ற மாணவர்களின் ஆர்வத்திற்கும் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்திற்கும் நாம் தான் இடையூறாக நிற்கின்றோம் என்று குற்றம் கூறியுள்ளார்.

மேலும் தமிழக மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை பயில்வதற்கான வாய்ப்பை பெறுகின்ற போது, தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் இருக்கின்ற மாணவர்கள் தமிழை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்ற வாய்ப்பை நாம் புறக்கணிக்கிறோமோ? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார். புதிய கல்விக் கொள்கையில் எத்தகைய மொழியையும் யார் மீதும் திணிக்கப்படவில்லை என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிந்திருந்தோம். இந்திய மாணவர்களின், இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சி மற்றும் உலக அளவில் அவர்களின் போட்டி திறன் ஆகியவற்றை அதிகரிக்க செய்யக்கூடிய புதிய கல்விக் கொள்கையை மொழி பற்றி மட்டுமே பேசி தடுத்துவிட வேண்டாம் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் முருகன் வலியுறுத்தி இருக்கிறார்.

Categories

Tech |