Categories
சினிமா தமிழ் சினிமா

போடு வெடிய… ஒரே மாதத்தில் ரிலீஸாகும் ஆர்யாவின் இரண்டு படங்கள்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் எனிமி, அரண்மனை-3 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள எனிமி படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மிருணாளினி, பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

Defamation case on Arya filed due to this 9 years old movie! - Tamil News -  IndiaGlitz.com

இந்நிலையில் எனிமி படத்தை வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை-3 படமும் செப்டம்பர் மாதம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. ஒரே மாதத்தில் ஆர்யாவின் இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த இரண்டு படங்களுமே தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |