தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சிறப்பு ஊழியம் விரைவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு இதுவரை சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறியதாவது, லூதியானா கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட தலைமை அலுவலர்களுக்கு இதுவரை சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை. மற்ற தொழிலாளர்களுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற 20 ஆம் தேதி அன்று சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டு விட்டது. மேலும் இந்த வாரத்திற்குள் சிறப்பு வந்துவிடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறினார்கள்.
இதில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தேர்தல் தலைமை அதிகாரிகளுக்கு 2,400 ரூபாய் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு1,800ரூ தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மேற் பார்வையாளர்கள் முறையே1,150 ரூ மற்றும் 1,100 சிறப்பு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.