உலக நாடுகளில் அதி தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு கட்டுக்குள் வந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. ஒரு சில நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அங்கு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தி வரும் நிலையில் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான தேவை இனி கிடையாது. கட்டாய மாஸ்க் அணிவது உட்பட அனைத்துக்கும் நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் முடிவுக்கு கொண்டுவருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென அறிவித்துள்ளார்.