தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து மெகா ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நேற்று மாலை நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கமல்ஹாசனின் படத்தை மணிரத்தினம் இயக்குகிறார். கடந்த 35 வருடங்களுக்கு முன்பாக மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மும்பை தாதா வேடத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் மீண்டும் 35 வருடங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினத்தின் கூட்டணி இணைவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் 500 கோடி ரூபாய் வரை சாதனை புரிந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் நடிகர் கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தை நடிகர் கமலின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
#KH234 https://t.co/I29fva9RH3
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2022