Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ஹரி- அருண் விஜய் படத்தின் மரண மாஸ் அப்டேட் இதோ…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், கே.ஜி.எப் பட பிரபலம் கருடா ராம், யோகி பாபு, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 9-ஆம் தேதி (நாளை) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.

Categories

Tech |