Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி… அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர்கள் லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், காந்தி டாக்கீஸ் படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கம் விடுதலை படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவர் ரஜினி, விஜய்க்கு வில்லனாக நடித்ததை தொடர்ந்து கமலுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

அதன் பிறகு விஜய் சேதுபதிக்கு பல வில்லன்கள் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதன்படி தற்போது ஜாவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது‌. இந்த படம் நேரடியாக டிஸ்னி பிளவுஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |