ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், பசுபதி, காளி வெங்கட், ஜான்விஜய், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் K9 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
Hats off @beemji @arya_offl and the entire cast and crew for creating this epic film #SarpattaParambaraiOnPrime
The hard work put in by the team is evident onscreen!! 👏🏼👏🏼https://t.co/tNH184r00w@PrimeVideoIN @officialneelam @K9Studioz @joinmaajja @Music_Santhosh— Suriya Sivakumar (@Suriya_offl) July 13, 2021
வருகிற ஜூலை 22-ஆம் தேதி சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகிறது. இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சார்பட்டா பரம்பரை படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் மாஸாக வெளியான இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .