Categories
கிரிக்கெட் திருவாரூர் மாவட்ட செய்திகள் விளையாட்டு

போடு…..! “அடுத்த ஐபிஎல் சீசனிலும் CSK கேப்டன் தல தோனி தான்”…. தலைமை செயல் அதிகாரி பேட்டி…!!!!!!

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ஆக தோனி நீடிப்பார் என தலைமை செயல் அதிகாரி காசி விசுநாதன் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆம் வருடம் கிரிக்கெட் அசோசியேஷன் வெள்ளி விழா அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஐபிஎல் கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர், கிரிக்கெட் சங்க மாநில செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் தலைமைச் செயல் அதிகாரி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, தமிழக வீரர்கள் குறைவாகத்தான் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுகிறார்கள் என தற்போது சொல்ல முடியாது. டெஸ்ட் போட்டியில் அஸ்வின், விஜய் இருக்கின்றார்கள். ஒரு நாள் போட்டியில் தினேஷ் கார்த்திக், அஸ்வின் இருக்கின்றார்கள். நிறைய தமிழக வீரர்கள் இந்திய அணியில் விளையாடுகின்றார்கள். மேலும் டிஎன்பிஎல் போட்டியில் விளையாடிய 13 பேர் ஐபிஎல் போட்டியில் விளையாடுகின்றார்கள். அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார். மேலும் கேப்டனாக நீடிப்பார் என கூறியுள்ளார்.

Categories

Tech |