ரயில் பாதை இடையே இறுதி கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
தற்போது மதுரை-போடி அகல ரயில் பாதை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளது. இதனால் கடந்த 2-ஆம் தேதி என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது என்ஜின் 9 நிமிடம் 20 நொடியில் 15 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தது. மேலும் இந்த ரயில் பாதையில் ரயில்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா? வேறு ஏதும் குறைபாடுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய நவீன ஆய்வு ரயில் சோதனை ஓட்டம் கடந்த 9-ஆம் தேதி நடந்தது.
அப்போது 125 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. இதனையடுத்து வருகின்ற 29-ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையில் இறுதி கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.