திருவாரூர் மாவட்டத்திலுள்ள அழகிரி காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 41 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் சார்பாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிகளே நடைபெறாமல் சாலை அமைத்ததாக நகராட்சி நிர்வாக வைத்த பேனரை கண்டித்து அழகிரி காலனியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Categories
போடாத சாலைக்கு 41 லட்சம் செலவு…. பொதுமக்களின் ஆதங்கம்…. பரபரப்பு….!!!!
