Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“போச்சா!”…. சாய்னா நேவால் விவகாரம்…. சிக்கலில் மாட்டிய சித்தார்த்…. சம்மன் அனுப்பிய போலீஸ்….!!!!

நடிகர் சித்தார்த் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து கடந்த சில தினங்களுக்கு பகிர்ந்த ட்வீட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் இது தொடர்பாக பேசிய அவர், “நடிகர் சித்தார்த் மீது இரண்டு புகார்கள் வந்துள்ளது. எனவே தற்போது சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். எங்களுக்கு அவருடைய அறிக்கை மட்டுமே தேவை. கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் எந்த முறையில் சித்தார்த்திடம் அறிக்கை பெறலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |