Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நிதி நெருக்கடியின் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். அதற்கு நீதிபதி நிதி நெருக்கடியை காரணமாக கூறும் அரசு சமீபத்தில் அகவிலை படியை உயர்த்தியது எதற்காக என்று கேள்வி எழுப்பினார்.

அதன் பிறகு வருகிற நவம்பர் மாதம் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிக்கையை நவம்பர் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |