அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் பல கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலித்து ஊதிய ஒப்பந்தத்தில் அறிவிக்கப்படும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை மாநகர போக்குவரத்துகழக தலைமை அலுவலகத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், கிளைகளின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மாநகர போக்குவரத்துகழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் உள்ளிட்ட அதிகாரிகள், மண்டல, கிளை மேலாளர்கள்க லந்துகொண்டனர் .
இதையடுத்து கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது “அரசு டவுன் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசம் பயணத்திட்டத்தில் தொடக்கத்தில் 40 % பேர் பயணம் மேற்கொண்டனர். இப்போது இது 61 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டு இதற்கான நிதியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
இதற்கிடையே பெண்களுக்கான இலவசம் பயண திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் பல கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆகவே அவை ஊதிய ஒப்பந்தத்தில் அறிவிக்கப்படும்” என்று அவர் பேசினார்.