போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் வருகிற 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் போக்குவரத்துதுறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது போக்குவரத்துதுறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.