Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு…. பத்திரிகைகளில் செய்தி வெளியிட தடை‌….. நீதிமன்றம் உத்தரவு…..!!!!

கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பேசும் பொருளாக மாறியது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கையில் வெளியான நிலையில், சில பத்திரிகை நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் புகைப்படம், அடையாளங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்றவற்றை வெளியிட்டதாக பல்வேறு குற்றங்கள் எழுந்துள்ளது. இந்த ஊடகங்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வாரம் இருமுறை வெளியாகும் செய்தித்தாளில் வெளியிடப்பட்டதாகவும், அந்த பிரதிகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்திரிகையில் வெளிவந்த செய்திகளை அனைவரும் பார்த்திருப்பார்கள். எனவே அதை திரும்ப பெறுவதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. இருப்பினும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையை வழக்கில் எதிர் மனுவாக சேர்க்க வேண்டும். அதோடு பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள், குடும்பத்தினரின் புகைப்படங்கள், அடையாளங்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படங்களை செய்தித்தாள்களில் வெளியிட கூடாது. இவர்களின் முகம் மற்றும் பிற அடையாளங்களை மறைத்து கூட செய்திகள் வெளியிடக்கூடாது என நீதிபதி கூறியுள்ளார். மேலும் நீதிமன்ற உத்தரவை மீறும் பத்திரிகை நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

Categories

Tech |