Categories
மாநில செய்திகள்

பொலிவிழந்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள்… 3 வருடங்களுக்குப் பின்… பராமரிப்பு பணிகள் தீவிரம்…!!!!!

மூன்று வருடங்களுக்குப் பின் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள புரதான சின்னங்களான அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம் சிறப்பு பெற்றதாக விளங்குகின்றது. இதில் உள்ள சிற்பங்களில் கடற்காற்று, உப்பு, மழையால் ஏற்படும் பாசி, காற்றில் உருவாகும் மண் தூசி, வாகன புகை, பறவைகள் எச்சம் போன்ற காரணங்களால் மாசு படிந்து காணப்படுகின்றது. சிற்பக் கலைகளில் உள்ள மாசுகளை படிமங்களை தொல்லியல் துறை 2 வருடத்திற்கு ஒருமுறை ரசாயனம் பூசி சுத்தம் செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று வருடங்களாக சிற்பங்கள் தூய்மை பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் பொலிவிழந்து காணப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின் மாமல்லபுரம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகின்றது. இங்குள்ள புராதான சின்னங்களை பார்வையிட வரும்  உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருகின்றார்கள். இதனால் புராதான சின்னங்களின் தூய்மை பராமரிப்பு பணிகளை விரைவாக செய்து முடிக்க தொல்லியல் துறை நிதிஒதுக்கி மூன்று வருடங்களுக்கு பின் தற்போது பணிகளை தொடங்கி இருக்கின்றது.

Categories

Tech |