தமிழகத்தில், அனைத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தற்போது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 27ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற உள்ளது. கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடக்கின்றது. அதனால் முதலில் கலந்தாய்வுக்கான கட்டணங்களை செலுத்த வேண்டும், பின்னர் அடுத்து தங்களுக்கு விருப்பம் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்து,தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடுவதற்கும், உறுதிப்படுத்துவதற்கும், கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் தரவரிசை பட்டியலின் மூலமாக எந்த மாணவர்கள் எந்த தேதியில் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்பதைப் பற்றிய அட்டவணையும் விருப்பமுள்ள கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கு ஏதுவாக கடந்த கல்வியாண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளின் திறன் அறிக்கைகளை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையத்தில் வெளியிட்டது. மேலும் 4 சுற்றுகளாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
கல்லூரிகளின் திறன் அறிக்கையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும்,நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும் தான் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல் மற்றும் மே மாத செமஸ்டர் தேர்வில் 30 கல்லூரிகள் 100% தேர்ச்சி பெற்று இருக்கிறது. அதைப்போன்று நவம்பர் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் இரண்டு கல்லூரிகள் மட்டுமே 100% தேர்ச்சியை பெற்றுள்ளது. இதைத்தவிர நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் 3 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற தகவலும் இடம் பெற்றிருக்கிறது.