Categories
தேசிய செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை… நாடு முழுவதும் கால அவகாசம் நீட்டிப்பு…!!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கால அவகா சம் நாடு முழுவதும் நவம்பர் மாதம் இறுதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தரவுகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவதற்கான கால அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நாடு முழுவதும் நவம்பர் மாதம் இறுதி வரையில் நீட்டிக்கப்படுவதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

இதுபற்றி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் இரண்டாம் ஆண்டு பொறியியல் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கை பணிகள் வருகின்ற நவம்பர் 21ம் தேதிக்குள் கட்டாயம் முடிக்க வேண்டும். டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்னரே முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு ஏற்றவாறு நாடு முழுவதும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |