பொறியியல் முடித்த மாணவர்களுக்கு சென்னை ஐஐடி 6 மாதங்கள் தொழில்நுட்ப திறன்களை அளிக்க உள்ளது. அதன்படி 2020-2021, 2021-2022 ஆண்டுகளில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த பயிற்சியில் சேரலாம் . விருப்பமுள்ள மாணவர்கள் sonyfs.pravartak.org.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும். 6 மாதங்கள் கொண்ட இந்த கோர்ஸில் ஏராளமான மாணவர்கள் பயன்பெறலாம்.
அதிலும் குறிப்பாக இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும். சோனி இண்டியா சாப்ட்வேர் சென்டர் இந்த கோர்ஸில் முன்னிலை வகிக்கும் 15 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பையும், பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மீதியுள்ள மாணவர்களுக்கு நேர்காணலுக்கும் ஏற்பாடு செய்து இதர கம்பெனிகளில் வேலை வாய்ப்பு பெற்று தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.