பொறியியல் படிப்பிற்காக புதிய பாடத்திட்டங்களை நடப்பு ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதாக அறிவித்திருந்தது.
அதன்படி முதல் மூன்று செமஸ்டர்களுக்கு தமிழர் மரபு, அறிவியல் தமிழ் உள்ளிட்ட ஐந்து புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.