Categories
தேசிய செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர அதிக மாணவர்கள் ஆர்வம் ….!!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டைவிட அதிக எண்ணிக்கையாக 1,60,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது முதலே தினமும் 2000-ற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து வந்தனர். கடந்த 11ஆம் நிலவரம்படி பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஒன்றரை லட்சத்தை தொட்டது. கடைசி நாளில் சுமார் 2000 பேர் வரை விண்ணப்பித்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் பொறியியல் படிப்புகளில் சேர 1,60,504 பேர் விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதில் கடந்த ஆண்டைவிட சுமார் 27,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்ப பதிவு செய்த மாணவ, மாணவிகளில் இதுவரை 90,272 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வரும் வியாழக்கிழமை கடைசி நாளாகும்.

Categories

Tech |