Categories
தேசிய செய்திகள்

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு…. வெளியான அறிவிப்பு….!!!!!!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் இல் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கை பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https:// www.tneaonline.org/ எனம் இணையதளத்தின் மூலமாக ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகளின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் எனும் அடிப்படையில் 110 மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் முதல் நாளில் 18,763 பேர் பதிவு செய்திருப்பதாக மாணவர் சேர்க்கை பிரிவு செயலாளர் கூறியுள்ளார். அவர்களில் 4,199 பேர் கட்டணம் செலுத்தி இருப்பதாகவும், 790 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு வருகிற ஜூலை 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித் துறை கூறியுள்ளது.

Categories

Tech |