Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகம்… அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு…!!!!

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி 1,114 பொறியியல் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். அதன் பின் பேசிய அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் பன்னாட்டு மொழியான ஆங்கிலத்துடன் தாய்மொழியான தமிழ் மொழியை படிக்க வேண்டும் விருப்பம் இருக்கின்றவர்கள் ஹிந்தியை படித்துக் கொள்ளலாம். மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி படிக்குமாறு கூறக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |