மக்கள் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தியுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உணவு, மருந்து, பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளதால் இலங்கை அரசை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் அந்நாட்டின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரான சஜித் பிரேமதரசா கலந்து கொண்டார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது “அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த அரசு நீண்டகாலம் உள்ளது. ஆனால் மக்களிடையே இந்த அரசுக்கு ஆதரவு இல்லை. இந்த அராஜக அரசை கண்டித்து நாட்டை புதிதாக மாற்ற மக்கள் வேறு குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.