சுவிற்சர்லாந்தில் முதியோர் இல்லத்தில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் தன் அந்தரங்க புகைப்படங்களை அதற்குரிய ஒரு இணையத்தில் வெளியிட்டு கூடுதல் வருமானம் பெற்று வருகிறார்.
உலகிலுள்ள பல்வேறு பிரபலங்களும் அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். மேலும் இதற்கென்றே ஒரு இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் அவர்கள் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதோடு அதனை பார்ப்பவர்களிடம் இருந்து பணமும் வசூலிக்கிறார்கள்.
ஆனால் கொரோனா ஊரடங்கினால் வேலையை இழந்து அன்றாட வாழ்க்கையை நடத்த திண்டாடி வரும் பலரும் இதுபோன்ற இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருமானம் பெற்று வருகிறார்கள். இதேபோன்று சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்தில் இளம்பெண் ஒருவர் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இவர் பொருளாதார நெருக்கடியால் இந்த இணையதள பக்கத்தில் தன் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக தெரிவித்திருக்கிறார். வழக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் அவரின் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார். அப்போது அவரின் நண்பர்கள் மற்றும் பலரும் பாராட்டியுள்ளனர்.
இதனால் தற்போது இந்த இணைய பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்காக மாதந்தோறும் 2000 பிராங்குகள் வரை கூடுதலாக பணம் பெற்று வருவதாக கூறியுள்ளார். பணத்திற்காக மட்டுமில்லாமல் தன் லட்சியம் மற்றும் பொழுதுபோக்கிற்காக இதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.