ஐரோப்பிய ஒன்றியம் மியான்மர் ராணுவ அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசை கவில்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ராணுவம் கைப்பற்றியது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. இதனைத் தொடர்ந்து மியான்மரில் ராணுவம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆனபோதிலும் ராணுவத்தால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் ராணுவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களை கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ராணுவ அரசின் மூத்த அதிகாரிகள் 22 பேர் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனம் ராணுவத்திற்கு நிதி உதவி அளித்து வருவதால் அதன் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் கியாஸ் வருவாயிலிருந்து மியான்மருக்கு வெளிநாட்டு நிதியில் இருந்து சுமார் 50% கிடைத்து வருகிறது. இதனால் அரசு எண்ணெய் மற்றும் கியாஸ் பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் ஐரோப்பிய நாட்டின் வருவாயில் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.