டயர் வெடித்ததாள் மினி லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருவிழாவிற்கு தேவையான பொருள்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென டயர் வெடித்ததால் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சேதமடைந்த லாரி மற்றும் பொருள்களை கிரேன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.