உலக நாடுகளில் பொய்களை பரப்ப சீனா கோடிக்கணக்கான பணத்தை சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு கொடுப்பதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதில் சிறந்த நடைமுறைகளை சீனா கையாண்டுள்ளது என்ற பொய்யான தகவலை பரப்புவதற்காக சீனா ஊடக பயனர்களை விலைக்கு வாங்கியுள்ளது. இதுபற்றி அறிக்கையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் மீது வைக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ள பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தாக்கத்தை சிறப்பாகக் கையாண்டதாகவும் அதன் பலனாக இறப்பு சதவீதம் குறைந்ததாகவும் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. திறம்பட செயல்படும் சமூக ஊடகங்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளியிடும் தகவலை அனைவருக்கும் பரப்ப முடிவெடுத்துள்ளது. இவ்வாறு பரப்பப்படும் ஒவ்வொரு பதிவிற்கும் ரூபாய் 4,741 முதல் 26,552 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இதனிடையே சீனாவிற்கு இத்தாலி நன்றி தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் ஒன்று வெளியானது. அதில் 40 சதவீதம் கணினி மூலம் உருவாக்கிய போலி என்பது தெரியவந்துள்ளது. அதோடு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய நாடுகள் திணறுவதாகவும் போதிய திறமையின்மை போன்ற பிரச்சாரங்களும் அவர்களை வைத்து செயல்படுத்தி வருகின்றது. அதுமட்டுமல்லாது சீனாவின் சமூக ஊடகம் வருடத்திற்கு 48.8 கோடி பொய்யான பதிவுகளை உலக நாடுகளில் பரப்புவதாக தெரியவந்துள்ளது.