மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ட்விட்டேர் பக்கத்தில் “நான் உலகத்தில் யாருக்கும் பயப்படமாட்டேன். யார் செய்யும் அநீதிக்கும் தலை வணங்க மாட்டேன். உண்மையை வைத்து பொய்யை வெற்றி பெறுவேன். அப்போது வரும் துன்பங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியும். இனிய காந்தி ஜெயந்தி என பதிவிட்டுள்ளார்.
நேற்று ஹத்ராஸ் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க ராகுல்காந்தி தடையை மீறி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது காவல் துறையினரால் அவர் தடுத்து நிறுத்தப்பட்ட போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இந்நிலையில் காவல்துறையினரின் அத்துமீறலுக்கும் அரசின் அதிகாரத்திற்கும் பதிலளிக்கும் விதமாக காந்தி ஜெயந்தி வாழ்த்து செய்தியை அவர் பதிவிட்டுள்ளார்.