Categories
மாநில செய்திகள்

பொய்யுரை, புகழுரையை நான் விரும்பவில்லை…. உள்ளதை உள்ளபடி செய்யுங்கள்…. முதல்வர் செம ஸ்பீச்…!!!

முதல்வராக பொறுப்பேற்ற மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார். இதையடுத்து இன்று மாலை 5 மணி அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது. மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசர, அவசிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழக மக்களின் வாழ்வாதாரம் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார். மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கூடுதலாக செவிலியர்கள், மருத்துவர்களை நியமிக்க வேண்டும். பொய்யுரை, புகழுரையை நான் கேட்க விரும்பவில்லை. அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும். இந்த இக்கட்டான காலத்தில் அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |