Categories
உலக செய்திகள்

பொய்யான செய்திகளை பரப்பினால்…. “இது தான் கதி”…. அதிரடி காட்டிய துருக்கி அரசு….!!!!

துருக்கி நாட்டில் பொய்யான செய்திகளை பரப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நாட்டின் அதிபர் எர்டோகன் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அந்நாட்டில் அரசு சார்பில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை அந்தந்த வாரம் வெளியான பொய்யான செய்திகள் மற்றும் அதனுடைய உண்மைத்தன்மைகளை குறித்து பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இனிமேல் பொய்யான தகவல்களை பரப்பினால் சம்பந்தப்பட்ட நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்டத்தை அந்நாட்ட அரசு தற்போது கொண்டு வந்துள்ளது. இதற்கு அந்நாட்டின் நாடாளுமன்றமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Categories

Tech |