கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே இருக்கும் சைனாவரம் கிராமத்தில் காலத்தீஸ்வரர் கோவில் உள்ள நிலையில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து 42 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதன்பேரில் நேற்று முன்தினம் 42 வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ஆனால் பொதுமக்கள் ஒன்று கூடி சீல் வைக்க கூடாது என எதிர்த்து தெரிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள் கோர்ட்டுக்கு கட்டுப்பட வேண்டியது அவசியம் பற்றி கூறினார்கள். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் பொன்னேரி-பஞ்செட்டி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட நிலையில் ஆறு மணி நேரமாக நீடித்தது. பின் அதிகாரிகள் இரவு 42 வீடுகளுக்கும் சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.