தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், ஜெயராமன், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத்குமார், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் பொன்னின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு பிரபல நடிகை மீனா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராயை பார்த்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. என் வாழ்க்கையில் இதுவரை யாரை பார்த்தும் நான் பொறாமை பட்டதில்லை. ஆனால் முதன்முறையாக ஐஸ்வர்யா ராயை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. ஏனெனில் பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கு நந்தினி கதாபாத்திரம் மிகவும் பிடித்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.